நக்ஸல்களுக்கு எதிராக முனைப்புடன் போராடும் அலுவலர்களை மாவட்ட நீதிபதிகளாகவும், எஸ்.பி.க்களாகவும் நியமிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் நடைபெற்ற `கிழக்கு மண்டல கவுன்சில்' மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர் கூறியதாவது:
இந்தியாவுக்கு மிகப் பெரும் சவாலாக விளங்கி வருகிறது நக்ஸல் பிரச்னை. அமைதியும், பாதுகாப்பும் இல்லாமல் ஒரு நாட்டுக்கு வளர்ச்சி என்பது கிடைக் காது. எனவே, ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு வழங்குவதுதான் அரசின் முக்கியக் குறிக்கோள்.
நக்ஸல் பிரச்னை உள்ள மாநிலங்களில் நக்ஸல்களுக்கு எதிராக முனைப்புடன் போராடும் அலுவலர்களை மாவட்ட நீதிபதி களாகவும், எஸ்.பி.க்களாகவும் நியமிக்க வேண்டும்.
திறமையான தலைமை இல்லாமல் நக்ஸல் பிரச்னையை ஒடுக்க முடியாது. ஆகவே, நக்ஸல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நல்ல அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த உதவியை வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.