ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழ்நாடு கள் இயக்கம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று சேலத்தில் தமிழ்நாடு கள் இயக்க வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
திருப்பூரை சேர்ந்த கதிரேசன் என்பவர் போட்டியிடுகிறார். தமிழ் நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப் பாளர் நல்லசாமி, கதிரேசனை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் நல்லசாமி செய்தியாளர் களிடம் கூறியதாவது:
எத்தனாலை வாகன எரிபொரு ளாகப் பயன்படுத்த வேண்டும். கேரள மாநிலத்தை பின்பற்றி தமிழகத்திலும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். விவசா யத்துக்கு என்று தனி பட்ஜெட் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதானமாக மேற்கொள்ளப் படும். இதற்கு விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள் ஆதரவு தெரிவிப்பர். தேர்தலில் போட்டி யிடாத கட்சியினர் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் கோரிக்கை நியாயமில்லை என்றும், வெளிநாட்டு இறக்குமதி மதுவகைகளும், டாஸ்மாக் மதுவகைகளும் கள்ளைவிட நல்லவை என்று ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யும் அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாதம் செய்து அதை நிரூபித்துவிட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்வோம்.
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை ஒருசில அரசியல் கட்சித் தலைவர்கள் நியாயப்படுத்துகின்றனர். இதே நிலை நீடித்தால் ஜனநாயகம் கெட்டுவிடும். இவ்வாறு நல்லசாமி கூறினார்.