எழுத்தாளர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு அச்சமாக இருக்கிறது என்று பெருமாள் முருகன் கூறினார்.
காலச்சுவடு பதிப்பகத்தின் 5 நாவல்கள் உட்பட 7 நூல்கள் வெளியீட்டு விழா சென்னை உமாபதி அரங்கில் நேற்று முன் தினம் நடந்தது. ‘தி இந்து’ தமிழ் இணைப்பிதழ்களின் ஆசிரியர் அரவிந்தன் எழுதிய ‘பயணம்’ நாவலை எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளியிட்டார். அவர் பேசியதாவது:
4 ஆண்டுகளுக்கு முன்பு..
4 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ‘மாதொரு பாகன்’ நூல் என் சொந்த ஊரான திருச் செங்கோட்டில் நடை பெறுவதாக எழுதப்பட்டது. அது 100 ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்ற தாக எழுதப்பட்ட புனைவு. கோயில் திருவிழாவின் போது அனுமதிக் கப்பட்டிருந்த வரைமுறையற்ற உறவு பற்றியும் அதில் ஒரு அத்தியாயத்தில் எழுதப்பட் டிருந்தது. அந்த பகுதியை மட்டும் நகல் எடுத்து அனை வருக்கும் கொடுத்து, அது திருச்செங்கோட்டையும், இந்துப் பெண்களையும் இழிவுபடுத்து வதாக பிரச்சாரம் செய்கின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பும், கொங்கு வேளாளர் கூட்டமைப்பும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ‘நூலை தடை செய்யவேண்டும். நூலாசிரியரைக் கைது செய்யவேண்டும்’ என்று முதலில் கோரிக்கை வைத்தனர். அது சாத்தியமில்லை என தெரிந்துகொண்டனர். எனினும், சட்டப்படியான நடவடிக்கை கோரி பிரச்சாரத்தையும், மிரட்டலை யும் தொடர்கின்றனர். அரசியலில் ஆதாயம் அடையும்வரை இப்பிரச்சினையை பயன்படுத்து வார்கள் என்று தெரிகிறது. இது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
சென்னை போன்ற பெரு நகரில் வாழ்ந்திருந்தால், இதுபோன்ற பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளலாம். ஆனாலும், எனக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், அரசியல் தலைவர்கள் மற்றும் பிற அமைப்புகள் கொடுத்த ஆதரவு துணிச்சலைக் கொடுத்துள்ளது. இது எனக்கான பிரச்சினை மட்டுமல்ல. யாருடைய புத்தகத்தில் இருந்தும் இதுபோல எடுத்துக்கூற வாய்ப்பு உள்ளது. எழுத்து சுதந்திரத்துக்கு இது அச்சுறுத்தலாக உள்ளது.
இவ்வாறு பெருமாள்முருகன் கூறினார்.
7 நூல்கள் வெளியீடு
அசோகமித்ரன் எழுதிய இரண்டு விரல் தட்டச்சு, அம்பை எழுதிய அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு, அ.இரவி எழுதிய ‘1958’, தேவகாந்தன் எழுதிய கனவுச்சிறை, அரவிந்தன் எழுதிய பயணம், பெருமாள்முருகன் எழுதிய அர்த்தநாரி, ஆலவாயன் ஆகிய 7 நூல்கள் வெளியிடப் பட்டன. காலச்சுவடு பதிப்பகத்தின் பொறுப்பு ஆசிரியர் சுகுமாரன், நிர்வாக மேலாளர் எஸ்.நாகம், தமிழ்நாடு ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆ.இரா.வெங்கடாசலபதி கலந்து கொண்டனர்.