சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அல்லாமல் பிற வழி களில் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.500 வரை வரி விதிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் தெரிவித்திருப்ப தாவது:
சென்னை மாநகராட்சியில் விளம் பரப் பலகைகள் மூலம் மேற் கொள்ளப்படும் விளம்பரங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட் டுள்ளது. விளம்பரப் பலகைகள் அல் லாமல் பிற வழிகளில் மேற்கொள் ளப்படும் விளம்பரங்களுக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.50 முதல் ரூ.500 வரை வரி நிர்ணயிக்க மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, ஒரு சதுர மீட்டருக்கு அரையாண்டுக்கு ரூ.500 என வரி தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் இந்த வரித் தொகையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்திக்கொள்ள முடியும்.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.