குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக மாநிலத் தலைவர்):
பிரதமர் நரேந்திர மோடியின் நல்லரசை நோக்கி வல்லரசுகளும் நாடி வரும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சி, நாட்டு மக்களின் வளர்ச்சியாக மாற இருக்கிறது. அனைவரும் வளர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் வாழ அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர்):
இந்தியா குடியரசாகி உலகின் மிகப்பெரிய வல்லரசாக திகழ்ந்தாலும் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. 120 கோடி மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு கிடைத்து உண்மையான குடியரசாக நமது நாடு விளங்கிட சூளுரை ஏற்போம்.
விஜயகாந்த் (தேமுதிக தலைவர்):
ஒற்றுமையையும், சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பேணிக்காத் திடுவோம் என சூளுரைப்போம். தேமுதிக சார்பில் எனது குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல்அலி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர். சரத்குமார், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் தலைவர் டாக்டர் ந.சேதுராமன், அகில இந்திய காங் கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்ட பல தலைவர்கள் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.