தமிழகம்

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 6 டீன்கள் மாற்றம்; 4 பேர் புதிதாக நியமனம்: சுகாதாரத் துறை உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டீன்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காலியாக இருந்த 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிதாக டீன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக சுகாதாரத் துறை பிறப்பித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள விவரம்:

ஸ்டான்லி மருத்துவமனை டீன் மீனாட்சி சுந்தரம் திருவாரூர் மருத்துவமனை டீனாகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் குணசேகரன் திருவண்ணாமலை மருத்துவமனை டீனாகவும், திருவண்ணாமலை மருத்துவமனை டீன் நாராயணபாபு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மருத்துவமனை டீன் ரேவதி மதுரை மருத்துவமனை டீனாகவும், மதுரை மருத்துவமனை டீன் சாந்தகுமார் தூத்துக்குடி மருத்துவமனை டீனாகவும், தூத்துக்குடி மருத்துவமனை டீன் எட்வின் ஜாய் கோயம்புத்தூர் மருத் துவமனை டீனாகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். ஸ்டான்லி மருத்துவ மனைக்கு விரைவில் டீன் நியமிக்கப்பட உள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிதாக டீன் நியமிக்கப்பட்டுள்ளது குறித்த விவரம்: மதுரை மருத்துவமனை மருத்துவத் துறை தலைவர் வடிவேல் முருகனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு கன்னியாகுமரி மருத்துவமனை டீனாகவும், தஞ்சாவூர் மருத்துவமனை டீன் (பொறுப்பு) சங்கரநாராயணனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு அங்கேயே டீனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மருத்துவமனை அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் நசீர் அகமது சையதுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு தருமபுரி மருத்து வமனை டீனாகவும், கோயம்புத்தூர் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ்க்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனை டீனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT