தமிழகம்

மழை நீர் தேங்குவதால் டெங்கு வைரஸ் நோய் வரும் பரவும்: இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

மழை நீர் தேங்கினால் அதன் மூலம் டெங்கு வைரஸ் நோய் பரவும். டாக்டரிடம் ஆலோசனை பெறாமல் மருந்து உட்கொள்ளக் கூடாது என்று, இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்திய மருத்துவக் கழக மாநிலத் தலைவர் டாக்டர் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன் மற்றும் மாநில செய லாளர் டாக்டர் சி.என்.ராஜா ஆகியோர் ராஜபாளையத்துக்கு வந்தனர். பல்வேறு இடங்களைப் பார்வையிட்டபின் அவர்கள் தெரிவித்ததாவது:

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் டெங்கு வைரஸ் நோய் கட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால், தேங்கிய மழைநீரில் இருந்து டெங்கு முதலான வைரஸ் நோய்கள் உருவாகின்றன.

பொதுவாக டெங்கு காய்ச்சல் ஒருவரை தாக்கினால் அல்லது இந்நோய் இருப்பது கண்டறியப் பட்டால், 96 சதவீதம் பேர் குண மடைந்து விடுவர். 4 சதவீதத் தினருக்கு மட்டுமே கடுமையான விளைவுகள் ஏற்படலாம், அதையும் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து முழு சிகிச்சை எடுத்துக் கொண்டால், ஆபத்தை தவிர்த்து குணமடையலாம்.

எனவே, தமிழக அரசு தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைத்து மருந்துகளையும் எல்லா மருத்துவமனைகளிலும் இருப்பு வைத்துள்ளது.

மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத் தப்பட்டுள்ளதால், கடந்த 2 ஆண்டு களில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.

மழைநீர் தேங்கினால்...

கொசுக்கடியிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வீட்டிலும் வெளியிலும் மழைநீரை தேங்க விட வேண் டாம். அத்துடன் போலி மருத்துவர் களிடம் சிகிச்சை எடுப்பது நோயை தீவிரமாக்கி, உயிருக்கு ஆபத்தாகிவிடும். மருத்துவர் களின் ஆலோசனை இல்லாமல் காய்ச்சலுக்கு எவ்வித மாத்திரை களையும் மருந்துக் கடைகளில் வாங்கி உண்ண வேண்டாம்.

அச்சம் வேண்டாம்

மருத்துவர்களிடம் முறையான சிகிச்சை எடுத்தால் டெங்கு காய்ச்சலில் இருந்து முழுமையான குணம் அடையலாம். எனவே பொதுமக்கள் யாரும் டெங்கு காய்ச்சல் குறித்து அச்சம் அடைய வேண்டாம்.

இவ்வாறு இந்திய மருத்துவக் கழகத் தலைவர் கூறியுள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித் துள்ளது.

டெங்குவால் 4 சதவீதத் தினருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படலாம். ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து முழு சிகிச்சை எடுத்துக்கொண்டால், குணமடையலாம்.

SCROLL FOR NEXT