தமிழகம்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 10 இடங்களில் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை கருவி: மின்வாரியம் நடவடிக்கை

செய்திப்பிரிவு

நிலக்கரி கொண்டு செல்லும் பாதையில் தீ விபத்து சேதத் தைத் தவிர்க்கும் வகையில், வடசென்னை மின் நிலையத் தில் 10 இடங்களில் தீ விபத்து முன்னெச்சரிக்கை கருவி பொருத்த மின் வாரியம் நட வடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் மின் வாரியத் துக்கு சொந்தமாக வட சென்னை, எண்ணூர், தூத்துக் குடி, மேட்டூர், வள்ளூர் ஆகிய இடங்களில் மின் நிலையங்கள் உள்ளன. இவை அனைத்திலும் நிலக்கரி மூலம்தான் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு கப்பல்கள் மூலம், மின் நிலையம் அருகிலுள்ள துறைமுகங்களுக்கு நிலக்கரி எடுத்து வரப்படுகிறது.

துறைமுகத்தில் இருந்து மின் நிலைய வளாகத்துக்கும் அரவை இயந்திரத்துக்கும் கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படு கிறது. கன்வேயர் பெல்டில் அவ் வப்போது ரப்பர் இழுவையின் வேகம், உராய்வு, வெப்பம் காரணமாக திடீரென தீப்பற்றி விடுகிறது.

சிறிய அளவில் ஏற்படும் தீயை அதிகாரிகள் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அனல் மின் நிலையம் வரை தீ பரவும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த காலங்களில் தூத்துக்குடி, வடசென்னை மற்றும் மேட்டூர் ஆகிய மின் நிலையங்களில் இதுபோன்ற விபத்துகள் நடந்து, பெரும் சேதம் ஏற்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய பொறியாளர்கள் தீவிர ஆய்வு நடத்தினர். தற்போது நிலக்கரி இழுவைப் பாதையில், தீ அணைக்கும் தானியங்கி கருவி மற்றும் தீ விபத்து முன் னெச்சரிக்கை கருவி பொருத்த, மின் வாரியம் முடிவு செய் துள்ளது. இதற்காக முதல் கட்டமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இழுவைப் பாதையில் 10 இடங் களில் தீ விபத்து முன்னெச் சரிக்கை கருவிகள் பொருத்த ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘தீ விபத்து முன்னெச்சரிக்கைக் கருவியில் சென்சார் கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதன்மூலம் தீ விபத்து ஏற்படும்போது, உடனடியாக அலாரம் ஒலி எழுப்பி மின் நிலைய அலுவலர்களை எச்சரிக்கை செய்யும். மேலும், அலாரம் அடித்ததும், நிலக்கரி இழுவைப் பாதையின் இயக்கத்தை தானாகவே நிறுத்தும் வகையில் மென்பொருள் இணைக்கப்படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT