தமிழகம்

உடற்கல்விப் படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் சேர்க்கை: தமிழ்நாடு விளையாட்டு பல்கலை. திட்டம்

ஜெ.கு.லிஸ்பன் குமார்

பொறியியல் கல்விக்கு நடத்துவது போல, உடற்கல்வியியல் படிப்பு களுக்கும் கலந்தாய்வு நடத்தி ஒற்றைச் சாளர முறையில் மாணவர்களைச் சேர்க்க தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 3 அரசு உதவி பெறும் உடற்கல்வியியல் கல்லூரிகள், 11 தனி யார் சுயநிதி உடற்கல்வியியல் கல்லூரி கள் உள்ளன. இங்கு பி.பிஎட். (இளங் கலை உடற்கல்வியியல்), எம்.பிஎட். (முதுகலை) படிப்புகள் வழங்கப்படு கின்றன.

ஒவ்வொரு கல்லூரியிலும் பிபிஎட் படிப்பில் அதிகபட்சம் 40 இடங்களும், எம்பிஎட் படிப்பில் 30 இடங்களும் இருக் கும். அரசு உதவி பெறும் கல்லூரிகள் அனைத்தும் தன்னாட்சி அந்தஸ்து பெற்றவை என்பது குறிப்பிடத்தக் கவை. உடற்கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத் தின் கீழ் செயல்படுகின்றன.

ஒற்றைச் சாளர முறை

அரசு உதவி பெறும் உடற்கல்வி யியல் கல்லூரியிலோ, தனியார் சுயநிதி கல்லூரியிலோ சேர வேண்டுமானால் பட்டதாரிகள் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்ணும் கல்லூரிக்கு கல்லூரி மாறுபடும். இடம் கிடைக் காமல் போய்விடுமோ என்று மாணவ, மாணவிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப் பிக்கும்போது அவர்களுக்கு செலவும் அதிகமாகும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு, பொறியியல் படிப்புகள், எம்இ, எம்பிஏ., எம்சிஏ போல பிபிஎட், எம்பிஎட் படிப்புகளுக்கும் ஒற்றைச் சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) மாணவர்களைச் சேர்க்கலாமா என்று உடற்கல்வி விளையாட்டு பல்கலைக்கழகம் ஆய்வுசெய்து வருகிறது.

அரசிடம் அனுமதி

உடற்கல்வி படிப்புகளில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி கோரி உயர் கல்வித் துறைக்கு விளையாட்டு பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பி யுள்ளது.

மேலும், பொறியியல் படிப்பு களில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் எப்படி சேர்க்கப்படு கிறார்கள் என்பது குறித்த ஆலோசனை களைப் பெற மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் உதவியையும் விளையாட்டு பல்கலைக்கழகம் நாடியுள்ளது.

ஒற்றைச் சாளர முறைக்கு அரசு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், வரும் ஆண்டில் பிபிஎட், எம்பிஎட் படிப்புகளில் சேர மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியே விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஒரே விண்ணப்பத்தில் கலந்தாய்வு மூலம், தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வுசெய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT