தமிழகம்

15 வயது சிறுமியின் திருமணம் நிறுத்தம்

செய்திப்பிரிவு

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தனசேகர் (34). இவரது மகள் மேனகா (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மேனகா 10-ம் வகுப்பு படித்துள்ளார். சரியான வேலை இல்லாததால் குடும்பத்தை நடத்த தனசேகர் கஷ்டப்பட்டு வந்துள்ளார். தனது மகளுக்கு எப்படி திருமணம் செய்துவைக்கப் போகிறேனோ என்று தனது நண்பரான கொத்தனார் தியாகுவிடம் தனசேகர் கூறியதாக தெரிகிறது. அதற்கு வரதட்சணை இல்லாமல் மேனகாவை தான் திருமணம் செய்துக் கொள்வதாக தியாகு தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவரின் குடும்பத்தினரும் முறைப்படி பேசி திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். அப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மகளிர் அமைப்பினர், 15 வயதான சிறுமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக செம்பியம் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் விரைந்து சென்று திருமணம் நடைபெற இருந்த கோயிலில் விசாரணை நடத்தினர். விசாரணையில் மேனகாவுக்கு 15 வயதுதான் ஆகிறது என்பது உறுதியானது. இதையடுத்து சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் நிறுத்தினர். அதன்பின் அவரது பெற்றோரை எச்சரித்துவிட்டு சென்றனர்.

SCROLL FOR NEXT