தமிழகம்

திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுப்பு ஏன்?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

திண்டுக்கல் மாவட்ட அ.திமு.க. வின் முன்னாள் மாநிலப் பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசனுக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவதால், அவர் கட்சியில் முழுமையாக ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட அ.திமு.க. வில் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தலைமையில் ஒரு கோஷ்டியும், முன்னாள் மாநிலப் பொருளாளர் திண்டுக் கல் சீனிவாசன் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் செயல் படுகின்றன.

அதிமுக தொடங்கிய காலத்திலிருந்து திண்டுக்கல் சி.சீனிவாசன், மாவட்டச் செயலாள ராக, மாநிலப் பொருளா ளராக, 4 முறை எம்.பி.யாக கட்சியில் முக்கிய நபராக வலம் வந்தவர். சீனிவாசன் மாநிலப் பொருளாளரானதும், தனது சிஷ்யரான நத்தம் விசுவ நாதனை திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக கொண்டு வந்தார். அன்று முதல், நத்தம் விசுவநாதனுக்கு கட்சியில் ஏறுமுகம்தான்.

குருவை மிஞ்சிய சிஷ்யனாக தற்போது நத்தம் விசுவநாதன் அமைச்சராகவும், கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் கட்சியின் இரண்டாம் கட்ட முக்கியத் தலைவராகவும் செல்வாக்குமிக்க வராக வலம் வருகிறார்.

ஆனால், திண்டுக்கல் சீனி வாசனோ, மாவட்ட அவைத் தலை வராக ‘டம்மி' பதவியில் உள்ளார். நத்தம் விசுவநாதன் ஆதிக்கத் தால், சீனிவாசன், கட்சியில் மீண்டும் முக்கிய இடத்துக்கு வர முடியாமல் தவித்தார்.

இந்த மக்களவை தேர்தலிலா வது, திண்டுக்கல் தொகுதியில் ‘சீட்' கிடைக்கும் என தவம் இருந்தார். அவரைபோல், அமைச்சர் விசுவநாதன் தனது மருமகன் ஆர்.வி.என்.கண்ணனுக்கு ‘சீட்' பெற காய் நகர்த்தி வந்தார். கண்ணனுக்கு, அமைச்சர் ஆசி இருந்ததால் அவர்தான் வேட்பாளர் என பிரச்சாரம் செய்யாத குறையாக முன்கூட்டியே சுவர் விளம்பரம் செய்ய அமைச்சர் ஆதரவாளர்கள் அரசு மற்றும் தனியார் சுவர்களை இடம்பிடித்து வைத்திருந்தனர்.

ஆனால், இருவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு கடைசியில், நிலக்கோட்டை டவுன் பஞ்சாயத்து வார்டு தேர்தலில் தோல்வியடைந்த உதயகுமார் என்பவருக்கு ‘சீட்' வழங்கப்பட்டது.

அதனால், திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் மருமகன் ஆர்.வி.என்.கண்ணன் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கண்ண னுக்காவது வயது இருப்பதால் அமைச்சருக்கு பின் அவர்தான் மாவட்டச் செயலாளர் என அவரது ஆதரவாளர்கள் அவரை சமாதானப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், வழக்கம்போல் இந்த முறையும் ‘சீட்' மறுக்கப்பட்டதால், திண்டுக்கல் சீனிவாசன் கட்சியில் முழுமையாக ஓரங்கட்டப்பட்ட தாகவே அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

SCROLL FOR NEXT