தமிழகம்

வரும் பொங்கலுக்கே ஜல்லிக்கட்டு நடத்த அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

வரும் பொங்கல் விழாவிலேயே ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

தமாகா தலைவர் ஜி.கே. வாசன்:

தமிழக மக்கள் மட்டுமன்றி, பல்வேறு மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணி கள் வந்து ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு விளையாட்டுகளை நேரடியாக கண்டு மகிழ்கின்றனர்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்தப் பொங்கல் விழாவிலேயே தொடரும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்:

தமிழக மக்களின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு, நிகழாண்டு நடைபெறுமா என்ற கவலையில் தமிழக மக்கள் உள்ளனர். மத்திய அரசு, காளையை விலங்கினப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு தலைப் பின்பற்றி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்யும் என்பது உறுதி. எனவே, தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று, அதை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு தெரிவித்துள்ள ஆலோசனையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.

SCROLL FOR NEXT