சாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாமகவின் தேர்தல் அறிக்கை புதனன்று வெளியிடப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். சாதிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப 100 சதவீதம் இடஒதுக்கீடு பிரிக் கப்பட வேண்டும். அரசுத் துறையை தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும், பொருளாதார அடிப் படையில் இடஒதுக்கீடு கூடவே கூடாது.
18 வயது வரை பள்ளிக்கல்வியை முற்றாக அரசின் செலவில் அளிக்க வேண்டும். கல்வி மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். பொதுசிவில் சட்டம் தேவையில்லை, ஒவ்வொரு பிரிவும் தத்தமது மதப்பிரிவுகளுக்கு ஏற்ப மாறுபட்ட சிவில் சட்டங்களை பின்பற்றுவது என்பது ஒரு அடிப்படை உரிமையாக வேண்டும்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருக்க அந்த சட்டத்தை திருத்துவோம்,நாடக காதலால் பெண்கள் ஏமாறாமல் தடுக்க திருமணத்துக்கு இருதரப்பு பெற்றோர்கள் சம்மதம் கட்டாயம் என்பதை அமலாக்குவோம், மது மற்றும் புகையிலை ஒழிக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற முக்கிய அம்சங்கள் பல இடம்பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கை குறித்து பாமக தலைவர் ஜி.கே மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பான பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குறுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.