தமிழகம்

சென்னை பல்கலை. தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

செய்திப்பிரிவு

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படுகின்றன. மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு நாளை முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பல் கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த இளங்கலை, முதுகலை மற்றும் தொழில் படிப்புகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.results.unom.ac.in மற்றும் www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

நாளை (புதன்கிழமை) முதல் மறு மதிப்பீட்டுக்கு ஆன்லைனில் (www.unom.ac.in) விண்ணப்பிக்கலாம். இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ.750 கட்டணம். உரிய மறுமதிப்பீட்டு கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கி இணையதளத்தில் நெட்பேங்க்கிங் மூலம் செலுத்தி விடலாம். விண்ணப்பிக்க பிப்ரவரி 3-ம் தேதி கடைசி நாள். மறுகூட்டலுக்கும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.200. கட்டணத்தை நெட்பேங்க்கிங் மூலம் செலுத்திவிடலாம். பிப்ரவரி 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT