தமிழகம்

10-ம் தேதி தீண்டாமை ஒழிப்பு உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர், மாநிலம் முழுவதும் 10-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.

இதுதொடர்பாக அந்த இயக்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும், கவுரவக் கொலை களை தடுக்க வேண்டும், தீண்டாமை ஒழிப்பு தடைச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கோரியும் டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணா விரதப் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம். அந்த நாளில் போராட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதி மறுத்து விட்டனர்.

எனவே, உலக மனித உரிமை தினமான டிசம்பர் 10-ம் தேதி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம்.

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில தலைவருமான ஆர்.நல்லகண்ணு தலைமை வகிக்கிறார்.

உண்ணா விரதத்தை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தொடங்கி வைக்கிறார். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் முடித்து வைக்கிறார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT