சட்டமன்றத்தை மூன்று நாட்கள் மட்டுமே நடத்துவது ஜனநாயகத்தை கேலி கூத்தாக்குகிறது என்று கம்யூ னிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டின.
டிசம்பர் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜக அரசை எதிர்த்து நடத்த விருக்கும் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் குறித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ (எம்-எல்) மாநிலச் செயலாளர் எஸ்.பாலசுந்தரம், எஸ்.யு.சி.ஐ (சி) மாநிலச் செயலாளர் ஏ.ரெங்கசாமி ஆகியோர் வெள்ளிக்கிழமை கூட்டாக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியதாவது:
சட்டமன்றத்தை மூன்று நாட்கள் மட்டும் நடத்துவது ஜனநாயகத்தை கேலி கூத்தாக்குகிறது. அதிமுக விடம் பெரும்பான்மை உறுப்பினர் கள் இருந்தும் ஏன் இப்படி செய்கி றார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தில் சமீபத்தில் பல முக்கிய சம்பவங்கள் நிகழ்ந் துள்ளன. அவற்றைப் பற்றி சட்ட மன்றத்தில் விவாதிக்க வேண்டும். எனவே, சட்டமன்றம் அதிக நாட் கள் முறையாகக் கூடவேண்டும். கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை அளித்தல் உள்ளிட்ட மூன்று ஆண்டுகளில் அரசு அறிவித்த திட்டங்கள் பயனாளிகளை சென்ற டைந்தனவா என்று விசாரிக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் தான் விவாதிக்க வேண்டும். கட்சி தலைமை ஆலோசனை மட்டுமே வழங்க முடியும். சட்ட மன்றத்தில் கேட்கும் கேள்விக்கு கட்சித் தலைமை யிடம் கேட்டு மறுநாள் பதில் சொல்வதாகக் கூறுவது சரியான நடைமுறையல்ல. தற்போது முதலமைச்சர் பொறுப் பில் யார் இருக்கிறாரோ அவர்தான் பொறுப் புடன் பதிலளிக்க வேண்டும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 50% குறைந்திருந்தாலும், உள் நாட்டு சந்தையில் விலை குறைக் கப்படவில்லை. பெட்ரோல், டீசல், விலையை ஆறு முறை குறைத்துவிட்டு மூன்று முறை கலால் வரியை உயர்த்தி அதன் பயனை அளிக்காமல் அரசு செய்து விட்டது. மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கவுரவ கொலைகள், சட்டம் - ஒழுங்கு ஆகிய பிரச்சினைகள் குறித்து பிரச்சார இயக்கத்தின்போது பேசப் படும். கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல், திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளால் பாஜகவின் வளர்ச்சி யைத் தடுக்க முடியாது.
வகுப்புவாத மோதலை ஏற்படுத் தும் வகையில் பேசியிருக்கும் பாஜக அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றனர்.