சென்னை தலைமை செயலகம் எதிரே புதிய சுரங்கப்பாதை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு புதிய சுரங்கப்பாதை மற்றும் நடைமேம்பாலங்களை அமைப்பது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி தலைமை செயலகம் எதிரே ராஜாஜி சாலையில் பாதசாரிகள் பயன்படுத்துவதற்காக புதிய சுரங்க பாதை அமைப்பது, எழும்பூர் ரயில் நிலையத்தில் தற்போது உள்ள மேம்பாலத்தை மேலும் நீட்டித்து தெற்கு பக்கம் உள்ள காந்தி-இர்வின் சாலை வரை மேம்பாலம் அமைப்பது, தரமணி ஐஐடி எதிரில் அமைக்கப்பட்டு வரும் பல்நோக்கு வாகன நிறுத்தும் இடத்திலிருந்து ஐஐடி நிறுவனத்துக்கு உள்ளே செல்லும் வகையில் குறுக்கே 8 மீட்டர் உயரம் கொண்ட உயர்மட்ட சிறுபாலம் அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.