தமிழகம்

கிராம உதவியாளர்களுக்கு நிர்வாக அலுவலராக பதவி உயர்வு: அரசாணை வெளியிட கோரிக்கை

செய்திப்பிரிவு

கிராம உதவியாளர்களை கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு அளிக்கும் அரசாணையை அரசு உடனடியாக வெளியிடக்கோரி கிராம உதவியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங் களைச் சேர்ந்த கிராம உதவி யாளர் சங்க பொதுக்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று நடை பெற்றது. இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.காண்டீபன், பொதுச் செயலர் எம்.ரவிச்சந்திரன், பொரு ளாளர் மதனகோபால், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் எம்.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலர் எம்.ரவிச்சந்திரன் கூறிய தாவது: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற,10 ஆண்டுகள் கிராம உதவியாளராக பணியாற்றிய வர்களைக் கொண்டு, 20 சதவீத கிராம நிர்வாக அலுவலர் பணியிடங் கள் நிரப்பப்படும் என்று சட்டப் பேரவையில், 2014-ம் ஆண்டு வருவாய்த்துறை மானிய கோரிக் கையின்போது அறிவிக்கப்பட்டது. அது குறித்த அரசாணை இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த அர சாணையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

அண்மைக்காலமாக சில மாவட்டங்களில் கிராம உதவி யாளர்கள் இரவுக் காவல் பணிக்கு அழைக்கப்படுகின்றனர். இதனால் பகலில் கிராம நிர்வாக அலு வலகத்திலும், இரவில் வட்டாட் சியர் அலுவலகங்களிலும் பணி யாற்ற வேண்டியுள்ளது. இந்த நடை முறையை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன என்றார் அவர்.

SCROLL FOR NEXT