தமிழகம்

மாணவர்களுக்கு என்.சி.சி. பயிற்சியை கட்டாயமாக்கும் சாத்தியம் இல்லை: பாதுகாப்பு அமைச்சர் தகவல்

பிடிஐ

மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று எழுத்து மூலம் அளித் துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

கல்வி நிறுவனங்களில் என்.சி.சி. (தேசிய மாணவர் படை) செயல்பாடுகளை மேம்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து மேற் கொள்ளப்படுகிறது. என்.சி.சி. மாணவர்களின் தற்போதையை எண்ணிக்கையை 2 லட்சத்தில் இருந்து படிப்படியாக 15 லட்ச மாக உயர்த்த முடிவு செய்யப் பட்டுள்ளது. என்.சி.சி. பயிற்சியை மாணவர்களுக்கு கட்டாயமாக்கும் சாத்தியமில்லை. நாடு முழுவதும் 10 முதல் 12 கோடி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க கட்டமைப்பு வசதிகள் இல்லை.

என்றாலும் எல்லைப் பகுதி யில் உள்ள பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதியின் அடிப் படையில் இப்பயிற்சியை கட்ட மாக்கும் திட்டம் உள்ளது.

ஆயுதப் படைகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களில் என்.சி.சி. மாணவர்களின் அளவு 10 முதல் 12 சதவீதமாக உள்ளது. என்.சி.சி. யின் பலத்தை அதிகரித்து, ஆயு தப்படைகளில் இம்மாணவர் களின் எண்ணிக்கை அதிகரிக் கப்படும். என்.சி.சி.யில் மாணவிகளின் எண்ணிக்கை 26 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT