சென்னையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் கட்டிகளுக்கு ரோபோ டிக் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக இந்த மருத்துவமனையின் கதிரியக்க சிகிச்சைத் துறை டாக்டர்கள் ஆனந்தகுமார், பெரியகருப்பன் கூறியதாவது:
இந்த மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் ரோபோடிக் இயந்திரம் மற்றும் ரூ.20 லட்சம் செலவில் நவீன கதிரியக்க இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் கட்டிகளுடன் வருபவர் களுக்கு ரோபோடிக் இயந்திம் மூலம் பரிசோதனை செய்யப்படும். இதனால் கட்டியின் அளவு, எவ்வளவு ஆழத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியும். இதையடுத்து ஊசி துவார துளை யின் மூலம் கட்டியின் சிறிய சதைப் பகுதியை எடுத்து பரிசோதனை செய்யப்படும். அதன்பின் கதிரி யக்க இயந்திரத்தின் உதவியுடன் சிறிய ஊசியை உள்ளே செலுத்தி சூடுபடுத்துவதால், கட்டி சுருங்கி அழிந்துவிடும்.
கல்லீரல், சிறுநீரகம், நுரையீர லில் உள்ள புற்றுநோய் கட்டிகள் மட்டுமின்றி எலும்பில் உருவாகும் கட்டி மற்றும் ரத்தக்குழாய் கட்டி களையும் அகற்ற முடியும். ரோபோ டிக் சிகிச்சை மூலம், அறுவை சிகிச்சை மற்றும் ரத்த வெளியேற் றம் இல்லாமல் புற்றுநோய் கட்டி அகற்றப்படுகிறது. இதுவரை 20 பேருக்கு ரோபோடிக் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவி லேயே முதல் முறையாக இங்கு தான் ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்த னர்.