தமிழகம்

மசூதி இடிப்பு தினம்: டிசம்பர் 6-ல் பாதுகாப்பு அதிகரிப்பு

செய்திப்பிரிவு

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களுக் கும் டிஜிபி அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பு ஆலோசனைகள் குறித்து அறிக்கை அனுப்பப்பட் டுள்ளன.

ரயில் மற்றும் பேருந்து நிலையங் கள், மக்கள் அதிகம் கூடும் இடங் களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயமாக வைக்க நிர்வாகத்தினருக்கு உத்தர விடப்பட் டுள்ளது. அதை போலீஸார் சோதனை செய்து உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடல் வழியாக தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களி லும், கடலோர காவல் நிலையங்க ளிலும் கூடுதல் போலீஸாரை பயன் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை கள் குறித்து மாநகர காவல் ஆணையர்கள் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பா ளர்கள் தலைமையிலும் தனித் தனியாக ஆலோசனைகள் நடத்தப் பட்டுள்ளன.

சென்னையில் இரவு நேர வாகன சோதனையை அதிகரிக்க காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தர விட்டுள்ளார். வணிக வளாகங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங் களில் மாறுவேடத்தில் போலீஸார் கண்காணிக்க தொடங்கிவிட்டனர். அச்சுறுத்தல் குறித்து உளவுத் துறை தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

SCROLL FOR NEXT