வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராயினர்.
திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, நீதிமன்ற உத்தரவின்பேரில் திருவில்லி புத்தூரில் உள்ள தலைமைக் குற்ற வியல் நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது. நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜராயினர்.
தங்களது குடும்பத்தினர் ஆஜராகா ததற்கு ஒரு மனுவும், வழக்கின் ஆவணங்களைக் கேட்டு ஒரு மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணை ஜன. 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.