தமிழகம்

நட்சத்திர பாட்மிண்டன் போட்டி சென்னையில் நடக்கிறது

செய்திப்பிரிவு

சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் ‘ஸ்டார்ஸ் பாட்மிண்டன் லீக்’ போட்டிகள் சென்னையில் உள்ள ஃபாரம் மாலில் இம்மாதம் 12,13,14 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இப்போட்டியில் நடிகர் பரத் தலைமையிலான சென்னை ஸ்மார்ட்ஸ் அணி, நடிகர் ஷாம் தலைமையிலான சென்னை ராக்கெட் அணி, நடிகர் ஸ்ரீகாந்த் தலைமையிலான சென்னை பிளிக்கர்ஸ் அணி ஆகிய மூன்று அணிகள் கலந்துகொள்கின்றன.

தமிழக சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்ளும் இப்போட்டிக்கு கிரீன் குரூப்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த அணிகளின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நடிகர்கள் ஷாம், பரத், காந்த் ஆகியோர் தங்கள் அணிகளை அறிமுகப்படுத்தினர்.

SCROLL FOR NEXT