கிருஷ்ணகிரியில் விற்பனை செய் யப்பட்ட பெண் குழந்தையை கேர ளாவில் போலீஸார் மீட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பாண்டு ரங்கன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெருமாள். இவரது மனைவி சேலத்தம்மாள். இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சமீபத்தில் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை, அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர் அல்போன்சா, ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததாகத் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஆட்சி யரின் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் நடத் திய விசாரணையில் அல்போன்சா குழந்தையை விற்பனை செய்தது உறுதியானது. தொடர்ந்து அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டார்.
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர் ஒருவரின் கணவர் ஜான்சன் என்பவர் மூலம், குழந்தை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. ரூ.30 ஆயிரத்துக்கு குழந்தையை வாங்கிய ஜான்சன் அந்த குழந் தையை கேரளாவைச் சேர்ந்த ஒரு வருக்கு அதிக தொகைக்கு விற்பனை செய்துள்ளார். இதை யடுத்து தனிப் படை கேரளாவில் பெண் குழந்தையை மீட்டுள்ளனர்.
இதுதொடர்பாக குழந்தையை வாங்கியவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அல்போன்சா, மேலும் பல குழந்தைகளை விற்பனை செய் திருக்க கூடும் என்ற சந்தேகத் தின்பேரில் தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.