தமிழகம்

சென்னையில் நாளை புத்தகக் காட்சி தொடக்கம்: ஏப்ரல் 27 வரை நடக்கிறது

செய்திப்பிரிவு

சென்னை ராயப்பேட்டையில் புத்தகக் காட்சி ஏப்ரல் 18 முதல் 27 வரை நடைபெறவுள்ளது.

ஏப்ரல் 16 - உலக புத்தக நாளையொட்டி பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வுடன் இணைந்து ‘சென்னை புத்தகச் சங்கமம்’ என்னும் புத்த கக் காட்சி ஏப்ரல் 18 வெள்ளிக் கிழமை மாலை 6 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது.

தொடக்க நாளன்று மணி மாறன் - மகிழினி வழங்கும் புத்தர் கலைக்குழுவின் பறை யிசை நடைபெறும். வரியியல் வல்லுநரும் தமிழக மூதறிஞர் குழுவின் துணைத் தலைவரு மான ச.இராசரத்தினம் தலைமை யேற்கிறார். பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனத் தின் பொதுக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் வரவேற்புரையாற் றுகிறார்.

நேஷனல் புக் டிரஸ்ட் இந்தி யாவின் இயக்குநர் எம்.ஏ. சிக்கந்தர் தொடங்கி வைக்கிறார். பெரியார் பேருரையாளர் பேரா சிரியர் மா.நன்னன் ‘எதைப் படிப்பது?’ என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார். சென்னை புத்தகச் சங்கம ஒருங்கிணைப் புக்குழு உறுப்பினர் பெரிகாம் பதிப்பகம் க.ஜெயகிருஷ்ணன் நன்றியுரையாற்றுகிறார்.

நாள்தோறும் மாலையில் கலை நிகழ்ச்சிகளும், சொற் பொழிவுகளும் நடைபெறும். இந்தப் புத்தகக் காட்சியில் 100 தமிழ் நிறுவனங்களும், 35 ஆங்கில நிறுவனங்களும், 10 மல்டி மீடியா நிறுவனங்களும் என மொத்தம் 200 நிறுவனங் கள் அரங்குகளை அமைக் கின்றன.

பொது மக்களுக்கு முதலுதவி சிகிச்சை உள்பட அடிப்படை வச திகளும் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT