சிறப்பு பாஸ்போர்ட் மேளா வரும் 13-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில், பங்கேற்க 'ஆன்-லைன்' மூலம் முன்பதிவு இன்று நடைபெறுகிறது.
நாடு முழுவதும் ஒரு கோடி பேருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக, பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விரைவாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலம், பொதுமக்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் வழங்குவதற்காக வரும் 13-ம் தேதி சனிக்கிழமை சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்படுகிறது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் நடைபெறும் இந்த மேளாவில் பங்கேற்க, ஆன்லைன் முன்பதிவு இன்று (10-ம் தேதி) மதியம் 2.45 மணிக்கு துவங்குகிறது.
>www.passportindia.gov.in என்ற இணையதளம் மூலம், விண்ணப்பதாரர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த மேளா மூலம், சுமார் 1,100 விணணப்பதாரர்கள் மற்றும் தட்கல் மூலம் விண்ணப்பிக்கும் 200 விண்ணப்பதாரர்கள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.