தமிழகம்

கொத்தடிமைகளாக தவித்தவர்களுக்கு மறுவாழ்வு பயிற்சி முகாம்

செய்திப்பிரிவு

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் அவர்களின் உரிமைகளை விளக்கி காஞ்சிபுரத்தில் நேற்று தனியார் தொண்டு நிறுவனம் பயிற்சி முகாம் நடத்தியது.

கொத்தடிமைகளாக இருந்து அரசு நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு மற்றும் சமுதாயத்தில் அவர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்து விளக்குவதற்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது. இதில் காஞ்சிபுரம், வேலூர், திரு வள்ளூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்தவர்கள் குடும்பத் துடன் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், அவர்களின் மறு வாழ்வு, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாயத்தில் அவர்களுக்கு உள்ள உரிமைகள், பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.

மேலும் அரசு உதவிகள் பெறுவது எப்படி, குழந்தைகளின் கல்வி, குழு செயல்பாடு உள்ளிட்ட விளக்கங்கள் எடுத்துரைக்கப் பட்டன.

இதுகுறித்து, கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட கவுரி என்ற பெண் கூறியதாவது: மீட்கப்பட்ட எங்களுக்கு தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம், அரசு பல்வேறு வகையில் உதவி செய்தது. மேலும், எங்களின் சுயதொழில் மேம்படுவதற்காக பல்வேறு தொழிற் பயிற்சிகளும் அளித்தது. இதன் மூலம் வீட்டு அலங்கார பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டேன்’ என்றார்.

SCROLL FOR NEXT