பெங்களூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பவானிதேவி (38) உயிரிழந்தார்.
பள்ளி விடுமுறையை அடுத்து தனது இரண்டு குழந்தைகளுடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்குதான் எதிர்பாராதவிதமாக குண்டு வெடிப்பில் சிக்கி அவர் உயிரிழந்திருக்கிறார்.
சென்னை பார்டர் தோட்டம், பூபேகம் தெருவில் இருக்கிறது பவானிதேவியின் வீடு. 8 மாதங்களுக்கு முன்னரே பவானிதேவி அவரது குடும்பத்துடன் இங்கு குடிபெயர்ந்திருக்கிறார். அவரது கணவர் பாலன் டயர் கடை நடத்திவருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பவானி தேவி பலியான தகவல் கிடைத்ததும் அவரது கணவர் பாலன் அங்கு விரைந்திருக்கிறார்.
பவானிதேவி மிகவும் அமைதியானவர், அனைவருடனும் எளிதில் நட்பு பாராட்டக்கூடியவர் என அவரது அண்டை வீட்டார் தெரிவித்தனர். பவானிதேவியின் திடீர் அகால மரனம் தங்களை சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாகக் கூறினர்,