தமிழகம்

ரூ.1 கோடி மோசடி: பெண் ஊழியர் கைது

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் கூட்டுறவு மொத்த விற்பனை சங்கத்தில் ரூ.1 கோடிக்கும் மேலான தொகையை மோசடி செய்த தாக பெண் ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை நல்லத்துக்குடியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மனைவி சித்ரா(44). இவர் மயிலாடு துறையில் உள்ள கூட்டுறவு சங்க மொத்த விற்பனை பண்டகசாலையின் மருந்தகப் பிரிவில் பணியாற்றி வந்தார்.

மருந்தகம் மற்றும் விற்பனைப் பிரிவு கணக்கு வழக்குகளை நிர்வகித்து வந்த சித்ரா, இதில் ரூ.1 கோடியே 6 ஆயிரத்து 83-யை முறைகேடு செய்தது தணிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மயிலாடுதுறை கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் நளினா, நாகை மாவட்ட வணிக குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், நேற்று முன்தினம் மாலை சித்ராவை கைது செய்தனர். பிறகு அவர் மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT