அனுமதியின்றி பேரணியாக வந்ததால், வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கடேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கடேஷ் பாபு, செவ்வாய்க் கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் 200-க்கும் அதிகமானோர் வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். தேர்தல் அலுவலகத்துக்கு சிறிது தூரத் தில் இறங்கி, அங்கிருந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
தேர்தல் அலுவலகத்தில் பாது காப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களைத் தடுத்தனர். அதை யும் மீறி பலர் வேட்பாளருடன் கோஷமிட்டபடி அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதைத் தொடர் ந்து வளாகத்தில் இருந்தவர் களை அதிமுக நிர்வாகிகள் வெளியே அனுப்பினர்.
இதுகுறித்து தொகுதி தேர்தல் அதிகாரி லட்சுமியிடம் கேட்டபோது, ‘‘மனு தாக்கல் செய்ய பேரணியாக வரவேண்டும் என்றால் தேர்தல் அதிகாரியிடம் அல்லது உதவித் தேர்தல் அதிகாரியிடம் முன்அனுமதி பெற வேண்டும். ஆனால், அதிமுக வேட்பாளருடன் பேரணியாக வந்தவர்கள் முன்அனுமதி பெறவில்லை. அலுவலக வளாகத்துக்குள் கட்சிக் கொடிகளுடன் யாரும் வரக்கூடாது என்றும் விதி உள்ளது. தேர்தல் அதிகாரி அலுவலக வளாகத்திலும், தேர்தல் அதிகாரி அறையிலும் நடந்த சம்பவங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. விதியை மீறிய வேட்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். தேர்தல் ஆணைய விதிப்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
பேரணியாக வரவேண்டும் என்றால் தேர்தல் அதிகாரியிடம் முன்அனுமதி பெற வேண்டும். ஆனால், அதிமுக வேட்பாளருடன் பேரணியாக வந்தவர்கள் முன்அனுமதி பெறவில்லை.