கடும் வறட்சி காரணமாக, முதுமலை புலிகள் காப்பகம் வியாழக்கிழமை (ஏப்.10) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் வரும் சுற்றுலாப் பயணிகள், ஆசியாவிலேயே பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ள தெப்பக்காடு, முதுமலை புலிகள் காப்பகத்தை காணாமல் திரும்புவதில்லை.
தற்போது முதுமலையில் வறட்சி நிலவுவதால் காப்பகத்தை தற்காலிகமாக மூட, வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு காப்பக அதிகாரிகள் பரிந்துரைத்தனர். இதையடுத்து வியாழக்கிழமை முதல் காப்பகத்தை மூட முதுமலை காப்பக துணை இயக்குநர் டி.சந்திரன் உத்தரவிட்டார்.