தமிழகம்

‘விகடன்’ குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் படத்திறப்பு நிகழ்ச்சி: பத்திரிக்கையாளர் மன்றத்தில் புகழஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘விகடன்’ குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியனுக்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.

‘விகடன்’ குழுமத் தலைவர் மறைந்த எஸ்.பாலசுப்ரமணியன் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று மாலை நடந்தது. சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதிதமிழன் வரவேற்றார். சுதந்திரப் போராட்ட வீரரும், விகடனில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவருமான ஜெகதீசன் (99), எஸ்.பாலசுப்ரமணியன் படத்தை திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து விகடன் குழுமத்தின் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பத்திரிகையாளர்கள், நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் எஸ்.பாலசுப்ரமணியன் படத்துக்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். எஸ்.பாலசுப்ரமணியனுடன் பழகிய, பணியாற்றிய காலங்களில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், அவருடைய துணிச்சல், பழகும் தன்மை போன்றவற்றையும் சொல்லி புகழஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT