தேர்தலுக்காக பொய்யான வாக்கு றுதிகளை வழங்கி இலங்கைத் தமிழர்களை இலங்கை அதிபர் ராஜபக்ச ஏமாற்ற முயற்சிக்கி றார் என ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூ ருக்கு நேற்று வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், கட்சிக் கொடியேற்றுதல், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியது: சுனாமி துயர சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகளாகியும் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக் கான உதவிகள் முழுமையாக சென்று சேரவில்லை. அதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசு கள் இனிமேலாவது மேற்கொள்ள வேண்டும். இலங்கை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய் யான வாக்குறுதிகளை வழங்கி இலங்கை தமிழர்களை தொடர்ந்து ஏமாற்ற முயல்கிறார் அதிபர் ராஜ பக்ச. இதை கண்டிக்கிறோம் என்றார்.
கட்சியின் மாவட்டப் பொறுப் பாளர்களான பெரம்பலூர் எம்.என்.ராஜா, அரியலூர் எஸ்.ஆர்.எம்.குமார், மற்றும் காரை.சுப்ரமணியம், ஆர்.ராஜேந்திரன், அசோகன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.