சென்னை மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டத்தில் நுகர்வோர்கள் இணைவதற்கான சிறப்பு முகாம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று நடக்கிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக சென்னையில் கொளத்தூர் திருவள்ளுவர் மஹால், அண்ணா நகர் ஸ்பாட்டன் பள்ளி (திருவள்ளுவர் சாலை), போரூர் பி.ஆர். ஆர். கல்யாண மண்டபம், மீஞ்சூர் செல்வம் மஹால், தண்டையார்பேட்டை சென்னை பள்ளி (செம்மி அம்மன் கோவில் தெரு), பள்ளிப்பட்டு ஸ்ரீசாய் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருவள்ளுவர் மாவட்டத் தில் எல்லப்பநாயுடு பட்டி கிராம பள்ளி, மெய்யூர் அரசு பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
ஒட்டிவாக்கம் பஞ்சாயத்து அலுவலகம், கீழ்கட்டளை மற்றும் பல்லாவரம் இடையே உள்ள அரசு மேல்நிலை பள்ளி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் எஸ்.டி.ஏ. மெட்ரிகுலேஷன் மேல் நிலை பள்ளி, கே.பி.கே.ரத்னநம்பி திருமண மண்டபம் ஆகிய 11 இடங்களில் இன்று காலை 10 முதல் மாலை 3 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
இந்த முகாமில் பெயரை பதிவு செய்ய வருபவர்கள் தங்களது ஆதார் அட்டையின் 2 நகல்கள், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்தின் (பாஸ் புக்) முதல் பக்க நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் சமீபத்தில் சிலிண்டர் வாங்கப்பட்டதற்கான பில் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் ஐஎப்எஸ் எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பாக மேலும் சந்தேகங்கள் இருந்தால், முகாமில் பங்கேற்கும் அதிகாரி களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத் திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.