தமிழகம்

ஓவியர் தயீப் மேத்தாவின் ஓவியம் ஏலத்தில் ரூ.16 கோடிக்கு விற்பனை

ராய்ட்டர்ஸ்

இந்தியாவின் பிரபல ஓவியர் தயீப் மேத்தாவின் ஓவியம் ஒன்று மும்பையில் நடத்தப்பட்ட ஏலத்தில் 2.8 மில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ.16 கோடி) விற்பனையாகி உள்ளது.

மும்பையில் கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் சமீபத்தில் ஏலம் ஒன்றை நடத்தியது. அதில் ஓவியர்கள் தயீப் மேத்தா, வாசுதியோ கைடோன்டே ஆகியோரின் ஓவியங்கள், ரவீந்திரநாத் தாகூர் பயன்படுத்திய கையடக்கப் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன.

அந்த ஏலத்தில் தயீப் மேத்தா 1999ம் ஆண்டு வரைந்த காளை ஓவியம் ரூ.16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதை நியூயார்க்கில் உள்ள ஒருவர் இணையம் மூலமாக வாங்கினார். "இந்த ஓவியம் ரூ.7 கோடி முதல் ரூ.11 கோடி வரை விலைபோகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக விலைக்கு ஓவியம் விற்பனையாகியுள்ளது.

இதன் மூலம் உலக அளவில் இந்திய படைப்புகளுக்கு மதிப்பு உயர்ந்து வருவது நிரூபண மாகிறது" என்றார் இந்த ஏல நிறுவனத்தின் தலைவர் சோனால் சிங்.

இந்த ஏலத்தில் தாகூரின் கையடக்கப் புத்தகம் 3 லட்ச டாலர்களுக்கு (சுமார் ரூ.1 கோடி) விற்பனையானது.

SCROLL FOR NEXT