தமிழகம்

3 நாள் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

மூன்று நாட்கள் நடந்த குளிர் காலக் கூட்டத் தொடர் முடிந்ததால் தமிழக சட்டப் பேரவை தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் என கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரூ.1751.18 கோடி மதிப்பிலான துணை நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டாம் நாளான 5-ம் தேதி, கச்சத் தீவை மீட்கவும், காவிரி ஆற்றில் கர்நாடகமும், பாம்பாற்றில் கேரளமும் அணை கட்டுவதை தடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி 2 அரசினர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு 3-ம் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், துணை நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடத்தி, பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

பிற்பகல் 2.45 மணிக்கு குளிர்காலக் கூட்டத்தொடர் முடிந்தது. தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆளுநர் உரைக்காக மீண்டும் சட்டப்பேரவை கூடும் என தெரிகிறது

SCROLL FOR NEXT