தமிழகம்

பெங்களூரு குண்டு வெடிப்பில் பலியான பெண்ணுக்கு தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி

செய்திப்பிரிவு

பெங்களூரு குண்டு வெடிப்பில் இறந்த பவானி உடலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் தென்சென்னை மாவட்டத்தலைவர் காளிதாஸ், மத்தியசென்னை மாவட்ட பொதுச் செயலாளார் தனசேகரன், மாவட்ட துணைத்தலைவர் சிவநேசன் அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "தீவிரவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் அது கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும், தாயை இழந்து வாடும் பெண்குழந்தைக்கு ஆதரவாக கர்நாடக அரசு அறிவித்ததைப் போல, தமிழக அரசும் உதவித்தொகை அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என" தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலையைச் சேர்ந்தவர் பவானி தேவி (38).கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடுவதற்காக தனது குழந்தைகளுடன் கடந்த 24-ம் தேதி பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பரிதாபமாக உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT