வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் தீக்கோழிகளை மிக அருகில் இருந்து பார்க்கும் விதமாக பார்வை கூடம் திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தற்போது 13 தீக்கோழி கள் பராமரிக்கப்பட்டு வருகின் றன. இது நாள் வரை தீக் கோழியை பார்வையாளர்கள் தூரத்திலிருந்தே பார்க்க முடிந் தது. தற்போது அதை அருகில் இருந்து பார்ப்பதற்காக தீக்கோழி பார்வை கூடம் அமைக்கப்பட் டுள்ளது. பார்வையாளர்களால் தீக்கோழிக்கும், தீக்கோழியால் பார்வையாளர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் கம்பி வேலி தடுப்பு ஏற்படுத்தப்பட் டுள்ளது. இதன் மூலம் பார்வை யாளர்கள் மிக அருகில் இருந்து தீக்கோழிகளை பார்க்க முடியும்.
பூங்காக்களில் அடைப்பிடத்தில் பராமரிக்கப்பட்டும் தீக்கோழிகள் இயற்கையாக அடைகாத்து குஞ்சு பொறிப்பது மிகவும் அரிதாகும். இப்பூங்காவில் ஏற்படுத்தப் பட்டுள்ள இயற்கையான சூழல் காரணமாக இங்குள்ள தீக்கோழிகள் முட்டையிட்டு, அடை காத்து இயற்கையாக குஞ்சு பொறிக்கின்றன.