சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச் சினைகள் பற்றி திமுக எம்எல்ஏக்க ளுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது 3 நாட்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் எழுப்ப வேண்டிய முக்கிய கேள்விகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின், துணை பொதுச் செயலாளர் துரைமுருகன், கொறடா சக்கர பாணி, எம்எல்ஏக்கள் பெரியகருப் பன், தங்கம் தென்னரசு, கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 22 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாலை 6.10 முதல் 6.40 மணி வரை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காவிரியில் புதிய அணை கட்டுவது, முல்லை பெரியாறு, மீனவர் பிரச்சினை, தருமபுரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பேரவை கூட்டத்தொடரில் எழுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பேரவைக்கு செல்கிறார் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். பேரவையில் அவர் செல்வதற்கான பாதை மற்றும் நாற்காலி வசதிகள் அமைக்கப்பட்டு இருந்தால் கூட்டத்தொடரில் பேசுவார். இல்லை என்றால், சட்டப்பேரவை வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பிவிடுவார் என திமுகவினர் தெரிவித்தனர்.
புகார் அளிக்க வந்த திமுகவினர்
விழுப்புரம் மாவட்டம் உளுந் தூர்பேட்டை (மேற்கு) ஒன்றியத் துக்கு நடந்த உட்கட்சி தேர்தலில் ராஜவேல் என்பவர் 22 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆசீர்வாதம் என்பவர் 31 வாக்குகளைப் பெற்ற நிலையிலும், ராஜவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக புகார் அளிக்க ஆசீர்வாதம் தரப்பை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட திமுகவினர் அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று வந்திருந்தனர்.
திமுக தலைமை நிர்வாகி களை சந்திக்க முடியாததால், அவர்கள் அங்கிருந்த செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் அவர்களை அழைத்து, அந்த இடத்துக்கு மறுதேர்தல் நடத்தப்படும் என்று கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.