தமிழகம்

‘மாணவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்’: பல்கலைக்கு எதிரான வழக்கில் நுகர்வோர் ஆணையம் உத்தரவு

செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பயின்று வேறு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்ததால் இடையில் விலகிய 7 மாணவர்கள், தாங்கள் செலுத்திய கல்விக் கட்டணம் மற்றும் அசல் சான்றிதழ்களை திரும்ப வழங்குமாறு கோரினர். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம், மீதமுள்ள 7 பருவங்களுக்கான கல்விக் கட்டணத்தை முழுமை யாக செலுத்தினால்தான் சான்றி தழ்களை தர முடியும் என தெரி வித்துள்ளது.

பல்கலைக்கழக முடிவை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் 7 பேர் திருச்சியைச் சேர்ந்த தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாது காப்புக் குழு மூலம் தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், மாண வர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தையும், அசல் சான்றிதழ் களையும் திரும்ப வழங்க பல்கலைக் கழகத்துக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவையும் எதிர்த்து பல்கலைக்கழக நிர்வாகம் புதுடெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தில் மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்தது. இருதரப்பு வாதங் களையும் கேட்ட இந்த ஆணை யம் வழங்கிய உத்தரவில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின்(யுஜிசி) நெறிமுறை களுக்கு ஏற்ப இந்த பல்கலைக் கழகம் செயல்படவில்லை. யுஜிசி நெறிமுறைகளின்படி மாணவர்கள் கல்லூரியிலிருந்து விலகும்போது கல்விக் கட்டணத்தில் ரூ.1,000 மட்டுமே பிடித்தம் செய்துகொண்டு மீதமுள்ள கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தின் விண்ணப்பத்தில் உள்ள நிபந்தனை, இந்த நெறிமுறைகளுக்கு மாறாக உள்ளதால், பல்கலைக்கழகத்தின் நிபந்தனைகள் பொருந்தாது என்றும், பல்கலைக்கழகத்தின் மறு பரிசீலனை மனுவைத் தள்ளுபடி செய்து, மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் வழங்கிய உத்தரவை உறுதிசெய்து, அதன்படி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை திரும்பச் செலுத்தவும் உத்தரவிட்டது.

மேலும், பல்கலைக்கழக நிர்வாகம் 7 மாணவர்களுக்கும் அவர்கள் செலுத்திய கல்விக் கட்ட ணம், நஷ்டஈட்டுத் தொகை, வழக் குச் செலவு மற்றும் சான்றிதழ் களை மாணவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது. இந்த வழக்கில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் சார்பில் தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழுவின் தலைவர் எஸ்.புஷ்ப வனம் ஆஜரானார்.

SCROLL FOR NEXT