தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடற்கரை அருகில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் வானம் மேகமூட்டமாக இருந்தது. நேற்று காலை முதல் லேசான தூறலுடன் தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்தது.
கடந்த சில தினங்களுக்கு முன் பரவலாக பெய்த மழையால் பூமி குளிர்ச்சியாக இருந்த நிலையில் நேற்று பெய்ய தொடங்கிய மழையால் குளிர்ந்த காற்று வீசியது.
கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி, புவனகிரி மற்றும் நெல்லிக்குப்பம் பகுதிகளில் தொடர் மழை பெய்தது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் லேசான வெயில் அடித்த நிலையில் நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்தது. எனினும் மழையை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.