தமிழகம்

வழக்கை ரத்து செய்யக் கோரி வைகுண்டராஜன் மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் குழுத் தலைவராக இருந்தவர் சுப்பையா. இவர், தனது பணிக் காலத்தில் வரு மானத்துக்கு அதிகமாக ரூ. 8.23 கோடிக்கு சொத்து குவித்ததாக சிபிஐ போலீஸார் வழக்கு பதிந்தனர். சுப்பையா சொத்து குவிப்பதற்கு உதவியதாக விவி மினரல்ஸ் பங்குதாரர்களான வைகுண்டராஜன், அவரது சகோத ரர் ஜெகதீசன் ஆகியோர் மீதும் சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வைகுண்டராஜன், ஜெக தீசன் இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆர். மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 8-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

முன்ஜாமீன் மனு…

இதே வழக்கில், முன்ஜாமீன் கேட்டு 2-வது முறையாக வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள் ளனர். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, வைகுண்டராஜன் தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்வ தற்கு வசதியாக, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை யடுத்து, விசாரணை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதிபதி ஜி. சொக்கலிங்கம் முன் வைகுண்ட ராஜன் தரப்பில் வழக்கறிஞர் நேற்று ஆஜராகி, முன்ஜாமீன் மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்றார். அதற்கு மறுத்த நீதிபதி, விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதையடுத்து, நீதிபதி ஆர். மாலா முன் வைகுண்டராஜன் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு கேட்டுக் கொண்டதால்தான் விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இப்போது முன்கூட்டியே விசாரிக்க கேட்பது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பி னார். அதற்கு மனுதாரர் தரப்பில், மனுதாரர்களின் நெருங்கிய உற வினர்கள் விபத்தில் சிக்கியதால் அவசரமாக விசாரிக்கக் கோருவ தாக கூறப்பட்டது. பின்னர், சிபிஐ வழக்கறிஞர் வாதத்துக்காக விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT