தமிழகம்

சாதிய கொலைகள்: சிபிஐ விசாரிக்க கிருஷ்ணசாமி கோரிக்கை

செய்திப்பிரிவு

தென் மாவட்டங்களில் நடந்து வரும் சாதி ரீதியான கொலைகளை விசாரிக்க சிபிஐ-யை நியமிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

இது தொடர்பாக கிருஷ்ணசாமி நேற்று சட்டப்பேரவைக்கு வெளியே கூறியதாவது: தென் மாவட்டங்களில் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினர், நாடார், யாதவர் போன்றவர்களை குறி வைத்து தொடர்ந்து சாதிய கொலை கள் நடக்கின்றன. இதனால் அவர்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து வெளியூர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இது தொடர் பாக சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க 3 நாட்களாக முயற்சி செய்தும் அனுமதி கிடைக்கவில்லை.

தென் மாவட்டங்களில் சாதி ரீதியாக கடந்த 6 மாதத்தில் மட்டும் 76 படுகொலைகள் நடந்துள்ளன. எனவே, இப்படுகொலைகள் குறித்து விசாரிக்க சிபிஐ-யை நியமிக்க வேண்டும். அமைதியை ஏற்படுத்த துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும். சாதி சார்புடையவர்களாக நடந்து கொள்ளும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

          
SCROLL FOR NEXT