தமிழகம்

புதிதாக 7 பிரிமியம் ரயில்கள் அறிமுகம்

செய்திப்பிரிவு

மும்பை-சென்னை, ஹைதராபாத்-சென்னை, புனே-கர்மாலி, ஹைதரா பாத்-மும்பை, ஹைதராபாத்-பெங்களூர், ஜெய்ப்பூர்-மும்பை பாந்த்ரா, ஜெய்ப்பூர்-எர்ணாகுளம் இடையே மொத்தம் 7 பிரிமியம் ரயில் சேவைகள் புதிதாக தொடங்கப்பட உள்ளன.

நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கள் நெருங்குவதால் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே பயணிகளின் நெரிசலைக் குறைக் கும் வகையில் 7 புதிய பிரிமியம் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

தற்போது 21 முக்கிய வழித் தடங்களில் பிரிமியம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.புனித யாத்திரைகளுக்காக ஜனவரி 12-ம் தேதிக்குள் புதிதாக மூன்று ரயில்கள் விடப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா நேற்று மாநிலங்களவையில் தெரிவித்தார். இந்த ரயில்கள் நாட்டின் புனிததலங்கள், சுற்றுலா தலங்களை இணைக்கும்.

SCROLL FOR NEXT