தமிழகம்

மதவாத சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: காங்கிரஸ் விழாவில் நல்லகண்ணு பேச்சு

செய்திப்பிரிவு

இந்தியாவில் மதவாத சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தி னார்.

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கோபண்ணா நடத்தி வரும் ‘தேசிய முரசு’ இதழின் 7-வது ஆண்டு விழா மற்றும் ஜவஹர்லால் நேரு வின் 125-வது பிறந்த நாள் சிறப்பு மலர் வெளியீட்டு விழா சென்னை யில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலக மான சத்தியமூர்த்தி பவனில் நடந்த இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு சிறப்பு விருந்தின ராக பங்கேற்றார். அவர் பேசியதாவது:

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து 6 மாதங்கள் ஆகி விட்டது. இந்துத்வாவை தூக்கிப் பிடிக்கும் செயல்களில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் 45 சதவீதம் பேர் தலித்களாக, பழங்குடியினராக, இஸ்லாமியர்களாக, கிறிஸ்து வர்களாக உள்ளனர். பாஜக அரசு இந்துத்வாவை தூக்கிப் பிடித்தால் இவர்களை கடலில் தள்ளிவிட முடியுமா?

மொழி திணிப்பில் ஈடுபடக் கூடாது என்பதில் நேரு உறுதி யோடு இருந்தார். ஆனால், பாஜக அரசு சமஸ்கிருதத்தை திணிப் பதில் முழு மூச்சில் செயல்பட்டு வருகிறது. நாட்டில் 40 ஆயிரம் பேர்தான் சமஸ்கிருதம் பேசத் தெரிந்தவர்களாக உள்ளனர். இவர்களுக்காக மீதமுள்ளவர் களும் அந்த மொழியைப் படிக்க வேண்டுமா?

நாட்டிலுள்ள அத்தனை மொழிகளையும், மதங்களையும் ஒடுக்குகிற ரீதியில் நடந்து கொள்ள கூடாது. காங்கிரஸ் விழாவில் கலந்துகொள்கிறேன் என்பதால் தேர்தல் சீட்களை கணக்கு போடக்கூடாது. அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. நாம் எல்லோரும் ஒன்றிணைந்து வகுப்புவாத, மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்பட வேண்டும்.

இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.

விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ அ.சவுந்தரராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் உட்பட பலர் பங்கேற்றனர்

கூட்டணிக்கு மறுப்பு

விழாவில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா, ‘‘கடந்த 2004-ல் ‘காமராஜர் ஒரு சகாப்தம்’ நூல் வெளியீட்டு விழா மூலம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக கூட்டணி உருவானது. இப்போது நேருவின் 125-வது பிறந்தநாள் மலர் வெளியீட்டு விழா மூலம் மதவாத சக்திகளுக்கு எதிராக மீண்டும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைய வேண்டும்’’ என்றார்.

பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் எம்எல்ஏ அ.சவுந்தராஜன், ‘‘வழியில் வந்தவர்களை வம்புக்கு இழுப்பதுபோல் உள்ளது கோபண்ணாவின் பேச்சு. கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டாம். ஆனால், மதவாதத்துக்கு எதிராக ஒரே மேடையில் குரல் கொடுப்போம்’’ என்றார்.

நல்லகண்ணு பேசும் போதும் ‘கூட்டணி பற்றி சிந்திக்க இப்போது அவசியம் இல்லை’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT