போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய முதல்வர் அதை அரசியலாக்க வேண்டாம் என தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் போக்குவரத் துத் தொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அரசியல் கட்சித் தலைவர்களை வம்புக்கு இழுத்து அறிக்கை வெளியிட்டுள் ளார். குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அறிக்கைகள் விடுவதாகவும், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களைத் தூண்டி விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் பல முறை டீசல் விலை உயர்த்திய போதும் பஸ் கட்டணத்தை உயர்த் தாமலும், ஊதிய உயர்வுக்காக தனியொரு நிதியை ஒதுக்கியது. போக்குவரத்துக் கழகத் தொழி லாளர்களுக்கு கடந்த 2013 செப்டம்பர் முதல் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். ஆனால், 1.1.2015 முதல் இடைக்கால நிவாரணம் என்று அறிவித்தது, 3 ஆண்டுக்கு ஒரு முறை உள்ள ஒப்பந்தத்தை 5 ஆண்டுகளாக மாற்றுவதற்கு ஒரு முன்னோட்டம் என்பதாக தொழி லாளர்கள் கருதி ஆத்திரமடைய செய்தது. இதனால் கொதித் தெழுந்த தொழிலாளர்கள் மறு தினமே போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் முன்பாக தங்க ளுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் 57 சதவீதம் வாக்குகள் பெற்று தொ.மு.ச. பேரவை அங்கீகரிக்கப்பட்ட தனியொரு சங்கமாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் அ.தி.மு.க. அரசின் நெருக்கடியால் தொ.மு.ச. உறுப்பினர்களை விலகும்படி செய்தும், விலகாதவர்களை அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகள் ஏமாற்றி அ.தி.மு.க. சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை செயற்கையாக அதிகப்படுத்திக் காட்டிவிட்டனர். தொ.மு.ச. உறுப்பினர் எண்ணிக்கையை குறைத்து விட்டதாகவும், அ.தி.மு.க. சங்கம்தான் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் தகுதி உள்ள சங்கம் என்றும் நீதிமன்றத் தீர்ப்பை அறியாமல் வெளியிட்டுள்ளார்.
கடந்த 16 மாதங்களாக பல போராட்டங்களை நடத்திய பிற கும், அரசு பேச்சுவார்த்தைக்கு வரு வதற்கு எந்த முயற்சியும் எடுக் காமல், தேவையில்லாத காரணங் களை சுட்டிக்காட்டியிருப்பதை கண்டு அவர்கள் அன்று இரவே வேலை நிறுத்தத்துக்கு தயாராக வேண்டிய சூழ்நிலை உருவாக் கியதற்கு இந்த அரசே காரணம் என்றார்.