தமிழகம்

ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விற்பனையை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு ராமதாஸ், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கை

செய்திப்பிரிவு

நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் விற்பனையை ரத்து செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மானியங்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அதன் அடுத்தக் கட்டமாக நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் மண்ணெண்ணெயை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. ஏழை மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த முடிவு தவறானது. கண்டிக்கத்தக்கது. அதிர்ச்சியளிக்கிறது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, மண்ணெண்ணெய்க்கு மானியம் வழங்கிய வாஜ்பாய்க்கும் துரோகம் செய்திருக்கிறது. மண்ணெண் ணெய் சமையலுக்காக பயன்படுத் தப்படவில்லை. விளக்கு எரிப்பதற் காக மட்டுமே பயன்படுத்தப் படுவதாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதனடிப்படையில் மின் இணைப்பு இல்லாத வீடு களுக்கு மட்டும் மண்ணெண்ணெய் மானியம் வழங்க முடிவு செய்யப் பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக் கிறது. மத்திய அரசின் இந்த வாதமே தவறானதாகும்.

இந்தியாவிலுள்ள குடும்பங் களின் எண்ணிக்கை சுமார் 25 கோடியாகும். மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி இவற்றில் 16 கோடி குடும்பங்கள் மட்டுமே சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். ஊரகப்பகுதிகளில் சில லட்சம் குடும்பங்கள் சாண எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள சுமார் 37 சதவீதம் குடும்பங்கள் மண்ணெண்ணெய், விறகு போன்றவற்றையே எரிபொருளாக பயன்படுத்துகின்றனர். நடுத்தர குடும்பங்களில்கூட எரிவாயு தீரும் போது மண்ணெண்ணெய்தான் கை கொடுக்கிறது. இத்தகைய புள்ளிவிவரங்களை நம்பிக் கொண்டு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குவதை நிறுத்துவது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசு உணர வேண்டும்.

இதையெல்லாம் உணர்ந்து மானிய விலை மண்ணெண்ணெய் விற்பனையை ரத்து செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு

தவறான புள்ளி விவரத்தை அடிப்படையாகக் கொண்டு, பொதுவிநியோக திட்டத்தின் கீழ் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை மத்திய அரசு அடியோடு ரத்து செய்துள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

“மத்தியில் பதவியேற்றுள்ள பாஜக அரசு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை குறைப்பதில் மிகுந்த வேகம் காட்டி வருகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 2 சதவீத மக்களே சமையலுக்கு மண்ணெண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்ற தவறான புள்ளி விவரத்தை அடிப்படையாகக் கொண்டு பாஜக அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. நம் நாட்டில் மொத்தம் 5.86 லட்சம் கிராமங்கள் உள்ளன. இதில், 1.20 லட்சம் கிராமங்களுக்கு இன்னும் மின் வசதி வழங்கவில்லை. இந்நிலை யில், மாநில அரசுகளை கலந் தாலோசிக்காமல், தான்தோன்றித் தனமாக மோடி அரசு மானிய விலை யில் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய்யை அடியோடு ரத்து செய்தது குறித்து தமிழக அரசு என்ன செய்யப் போகிறது” என்று அறிக்கை ஒன்றில் இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT