தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்படும் முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடைசி தேதி ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருதுக்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, “தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், ஆல்ஸ் சாலை, எழும்பூர், சென்னை 600 008” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று இயக்குநர் கா.மு.சேகர் அறிவித்துள்ளார்.