தமிழகம்

மனிதநேய அறக்கட்டளையில் படித்து ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற 39 பேருக்கு பணி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை நடத்தும் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் படித்து தேர்வு பெற்ற 39 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், இருவருக்கு தமிழ்நாடு மாநிலப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மனிதநேய அறக்கட்டளை நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:

கடந்த 2013-14ம் ஆண்டு நடந்த குடிமையியல் தேர்வில், மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகத்தில் பயின்ற மாணவர்கள் 46 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 39 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 பேருக்கு பணி ஒதுக்கீடு நிலுவையில் உள்ளது.

இதில் ஜெயசீலன், பிரதீப்குமார் ஆகிய இருவருக்கும் தமிழ்நாட்டில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT