தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள காயிதே மில்லத் நகரில் டி.ஆர்.பாலுவின் சாதனை புத்தகங்கள் முத்திரை இல்லாமல் திரும்பவும் பட்டுவாடா செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறைக்கு விளார் ஊராட்சி மன்றத் தலைவர் சோம.ரெத்தினசுந்தரம் புதன்கிழமை புகார் செய்தார்.
வட்டாட்சியர் காமராஜ் உள்ளிட் டோர் காயிதே மில்லத் நகருக்குச் சென்றபோது, அங்குள்ள வீடுகளில் திமுக தேர்தல் அறிக்கை புத்தகங் களை பட்டுவாடா செய்து கொண்டி ருந்த ஆர்.எம்.எஸ். காலனி அஞ் சலக தபால்காரர் கலியதாசை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவரிடம் 141 திமுக தேர்தல் அறிக்கை புத்தகங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
அவற்றில் ரூ.4 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டப்பட்டிருந்த தாலும், முத்திரைகள் இல்லை என்பதால், அவற்றை பறிமுதல் செய்து, கலியதாசையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். நகரின் பல் வேறு பகுதிகளிலும் புத்தக பட்டு வாடா நடந்ததாக கூறப்படுகிறது.